There were 125 press releases posted in the last 24 hours and 400,541 in the last 365 days.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நாள்: சிறிலங்காவை அனைத்துலக நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Outside UN

பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை ஒரு குற்றவாளி கூட நீதியின் முன் நிறுத்தப்படவில்லை அல்லது கைது செய்யப்படவில்லை.

NEW YORK, UNITED STATES, August 31, 2024 /EINPresswire.com/ --

பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை ஒரு குற்றவாளி கூட நீதியின் முன் நிறுத்தப்படவில்லை அல்லது கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் சிறிலங்காவின் அரசியல்-இராணுவ கட்டமைப்பு தலைவர்களை நீதிக்கு கொண்டு வருவதற்கான ஒரே பாதை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐ சீ சீ) மூலம் மட்டுமே என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது அமர்வில், சிறிலங்காவை ஐ.சி.சி.க்கு பரிந்துரைக்குமாறு கோருவதோடு, இனப்படுகொலை மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டிய நேரம் இதுவென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஓகஸ்ற் 30, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாள். இந்நாளையொட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் சர்வதேச சமூகத்திடம் மூன்று கோரிக்கை விடுத்துள்ளது.

1) வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டின் தரப்பினர் சிறிலங்காவுக்கு எதிராக முறைப்பாடு செய்ய வேண்டும்.

2) அனைத்துலக சட்ட நியமத்தின் 31வது பிரிவின் பிரகாரம் சிறிலங்காவுக்கு அழுத்தங்களை கொடுக்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்துகிறோம்.

3) மேலும் மிக முக்கியமாக, சிறிலங்காவின் நிலைமையை ஐ.சி.சி.க்கு பரிந்துரைக்குமாறு சர்வதேச சமூகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

என கோரப்பட்டுள்ளது. மேலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தங்கள் அன்புக்குரியவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்பது பற்றிய உண்மை நிலை தெரியாத நிச்சயமற்ற நிலையில் வாழ்வதானது, எண்ணிளவிட முடியாத கொடுமையாகும். அவர்களது குடும்பங்களை வேதனையில் ஆழ்த்துகிறது, முடிவில்லாத வேதனையை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது.

வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் என்பது ஒருவகை சித்திரவதை என்பதை ஐ.நா மனித உரிமைச்சபை கூறுகின்றது. , வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் அறிவித்தது:
'பொது மக்களுக்கு எதிரான பரவலான அல்லது முறையான தாக்குதலின் ஒரு பகுதியாகவே வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் அமைவதோடு,மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும்.' என ஐ.நா பொதுச் சபை கூறுகின்றது. இந்த வலுவான வார்த்தைகள் இருந்தபோதிலும், அனைத்துலக சமூகம் மிகவும் அமைதியாகவே இருக்கிறது, இந்த கொடுங்குற்றத்தை தொடர்து அனுமதிக்கவே தயாராக உள்ளது.

சமூகத்தில் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு அரசுகள் வலிந்து காணாமல் போவதை பயன்படுத்துகின்றன என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாள் செய்திக்குறிப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இலங்கைத்தீவில் இதுவானது, பயங்கரவாதத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. போரின் ஓய்வுக்கு முன்பும், போர் காலத்திலும், பின்னரும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. சிறிலங்கா அரசினால் பயன்படுத்தப்படுகின்றது.

வலிந்து காணாமல் போதல் தொடர்பான ஐ.நா செயற்குழுவின் கூற்றுப்படி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உலகளாவிய எண்ணிக்கையில் இலங்கையானது ஈராக்கிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கிறது. 200,000 தமிழர்கள் கணக்கில் வரவில்லை. 2 ஆயிரம் நாட்களுக்கும் மேலாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அவர்களது தமிழ் தாய்மார்கள், மனைவி, பிள்ளைகள் என உறவுகள் போன உண்மையை அறியக் கோரி நாள்தோறும் போராட்டம் நடத்தி வருகின்றனர். துயராக இத்தாய்மர்களில் பதில்களை காண முன்னரேயே இறந்துவிட்டனர். இவர்களது கோரிக்கை மீதான உலகின் அலட்சியம் அவர்களை மேலும் மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐ.நா உட்பட சர்வதேச சமூகம் நீதி வழங்கத் தவறிவிட்டது. மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற அனைத்துல அமைப்புகளை, சிறிலங்கா அரசாங்கமானது தனது ஏமாற்று ஆணைக்குழுக்கள் மற்றும் வெற்று வாக்குறுதிகள் மூலம் திருப்திப்படுத்த முயற்சித்துள்ளது. கமிசன்கள் என்று அழைக்கப்படும் ஆணைக்குழுக்கள் மூலம், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், சர்வதேச அமைப்புகளை முட்டாளாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு புகைப் படலமாகும். 'இலங்கையில் வலிந்து காணாமல் போனமைக்கான பொறுப்புக்கூறல்' என்ற அறிக்கை, உண்மையை மறைக்க அவர்களைப் பயன்படுத்தி இலங்கைக்கு 'கமிஷன் போதை' உள்ளது என்று கூறுகிறது.

உலகை முட்டாளாக்கும் மற்றொரு முயற்சியாக சிறிலங்கா அரசாங்கத்தினால் காணாமல் போனோர் அலுவலகம் (ஓ எம் பி) உருவாக்கப்பட்டது. அதன் உருவாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை; அனைத்துலக வல்லுனர்களின் பங்கேற்பு இல்லை, மேலும் ஓ எம் பியானது முன்னாள் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் போன்றவர்களால் நிரம்பியுள்ளது. ஓ எம் பி தனது கண்டுபிடிப்புகளை நீதித்துறைக்கு அல்லது காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு வழங்குமாறு கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஓ எம் பிஎன்பது ஒரு ஏமாற்று வேலையே தவிர வேறில்லை.

வலிந்து காணாமல் போதல் தொடர்பான உடன்படிக்கையை அங்கீகரிப்பதாக சிறிலங்கா பெருமை கொள்கிறது, ஆனால் அவர்கள் அதை தங்கள் சொந்த சட்டங்களின் ஒரு பகுதியாக மாற்றவில்லை என்றால் என்ன பயன்? அனைத்துலக சட்ட நிமயங்களின் கீழ் நியமிக்கப்பட்ட குழுவிடம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களைக் கொண்டுவந்து நீதியைப் பெற அனுமதிக்கும் 31வது பிரிவை ஒதுக்கி விலக்குவதன் மூலம் பொறுப்புக்கூறலை சிறிலங்கா தவிர்க்க முடியும் என்றால், அனைத்துலக சட்ட நியமங்களின் நோக்கம் என்ன ? அனைத்துலக சட்ட நியமத்தின் ஒப்புதலானது பொறுப்பை சமாதானப்படுத்தவும் தவிர்க்கவும் மற்றொரு மோசடி முயற்சியாகும்.

சிறிலங்காவின் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றின் கூற்றுப்படி, 90 வீதமான வலிந்து காணாமல் போதல்களுக்கு காரணியாக அரச பாதுகாப்புப் படையினரே எனக் கூறுகிறது. விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கோ, யுத்தத்தின் இறுதியில் பிடிபட்ட அருட்தந்தை ஜோசப் மற்றும் போராளிகளுக்கோ என்ன நடந்தது என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. அப்போதைய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் 'இலங்கையின் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஒன்றான மோதலின் முடிவில் காணாமல் போன சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.' என குறிப்பிடுகின்றது. எவ்வாறாயினும், அதன் பின்னர் சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களின் கதி என்ன என்பது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்பது தார்மீக சீற்றமாகும்.

பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை ஒரு குற்றவாளி கூட நீதியின் முன் நிறுத்தப்படவில்லை அல்லது கைது செய்யப்படவில்லை. இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொறுப்புக்கூறல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய அறிக்கையில், இலங்கையில் தண்டனையிலிருந்து விடுபடுவது ஆழமாக வேரூன்றியுள்ளது. இதற்கு முதன்மையான காரணம் சிறிலங்கா அரச கட்டமைப்புக்கள் இயல்பாகவே இனவெறி கொண்டவை. இது அரசியல் விருப்பத்தின் கேள்வி அல்ல இது நீதி வழங்கும் திறன் பற்றிய கேள்வி அல்ல. உண்மை என்னவென்றால், சிறிலங்காவின் அரசியலில் பரவலான மற்றும் வேரூன்றிய இனவாதம் ஊடுருவி உள்ளது. சிங்கள அரசியல் கலாசாரம் தமிழர்களுக்கு நீதி வழங்கவில்லை, அனுமதிக்காது, அனுமதிக்காது.

நீதிக்கான எங்களின் ஒரே நம்பிக்கை சர்வதேச மன்றங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து மட்டுமே. இலங்கைக்குள் தமிழர்களுக்கு நீதி இல்லை என்ற உண்மையை சர்வதேச சமூகம் இறுதியாக பார்க்க ஆரம்பித்துள்ளது. ஆனால் அவர்கள் வழங்கும் தீர்வுகள் - உலகளாவிய அதிகார வரம்பு மற்றும் இலக்கு தடைகள் - குற்றவாளிகளுக்கு அர்த்தமற்றவை. பயணத் தடையா? பயனற்றது.

இந்த குற்றவாளிகள் மேற்கில் விடுமுறை எடுப்பதில்லை. சொத்து முடக்கம்? பயனற்றது.
அவர்களின் பணம் மேற்கத்திய வங்கிகளில் இல்லை. இலங்கை போர்க்குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குள் நுழைந்தாலும், அவர்களைப் பிடிப்பதற்கான செயல்பாட்டு அமைப்பு இல்லை.
சவேந்திர சில்வாவுடன் நாம் பார்த்தது போல், அவர்கள் கைது செய்யப்படும் அரிதான சந்தர்ப்பங்களில் கூட, நீதியின் பிடியில் இருந்து தப்பிக்க இராஜதந்திர பாதுகாப்பு அவர்களின் கேடயமாக மாறுகிறது.

அரசியல்-இராணுவ ஸ்தாபனத்தின் தலைவர்களை நீதிக்கு கொண்டு வருவதற்கான ஒரே பாதை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐ சீ சீ) மூலம் மட்டுமே என்று நாங்கள் நம்புகிறோம்.

அதனால்தான், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 57ஆவது அமர்வில், சிறிலங்காவை ஐ.சி.சி.க்கு பரிந்துரைக்குமாறு கோருகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனதறிக்கையில் தெரிவித்துள்ளது.

Visuvanathan Rudrakumaran
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
r.thave@tgte.org
Visit us on social media:
Facebook
X
Instagram

Legal Disclaimer:

EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.