There were 1,191 press releases posted in the last 24 hours and 298,912 in the last 365 days.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தூர நோக்குக் கொண்டவர்: வி. ருத்திரகுமாரன்

1958 ஆம் ஆண்டு தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்ட போது தலைவருக்கு நான்கு வயது. அப்பருவத்திலே தலைவர் தனது தந்தையிடம் ஏன் தமிழர்கள் திருப்பி அடிக்கவில்லை எனகேட்டவர்

பல நாடுகளில் வாழும் தமிழர்கள் யாவரும் தமக்கு அங்கீகாரம் கிடைப்பதற்கும் தாம் தலைநிமிர்ந்து நிற்பதற்கும் தலைவரே காரணம் என்ற கருத்தைக் கொண்டவர்கள்.”
— வி. ருத்திரகுமாரன்
NEW YORK, USA, November 26, 2022 /EINPresswire.com/ -- தலைவர் என்று உலகத்தமிழர்களால் அன்போடும், மரியாதையோடும் அழைக்கப்படும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68வது பிறந்தநாளையொட்டிய செய்தியை வெளியிடுவதில் நான் பெருமிதமும், மட்டற்ற மகிழ்ச்சியும் அடைகின்றேன்.

தலைவர் ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் மட்டுமல்ல, உலகத்தமிழர்களின் நெஞ்சங்களிலும் நிரந்தர இடத்தைப் பெற்றவர். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்ற காலத்தில் பல நாடுகளுக்கு பேச்சுவார்த்தை தொடர்பாக பயணம் செய்த போது பல நாடுகளில் வாழும் தமிழர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. மலேசியத் தமிழர்கள் என்றாலும் சரி, சிங்கப்பூர் தமிழர்கள் என்றாலும் சரி, தென்னாபிரிக்க தமிழர்கள் என்றாலும் சரி யாவரும் தமக்கு அங்கீகாரம் கிடைப்பதற்கும் தாம் தலைநிமிர்ந்து நிற்பதற்கும் தலைவரே காரணம் என்ற கருத்தைக் கொண்டவர்கள்.

பேச்சுவார்த்தைக் காலத்தில் தலைவரோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தது. தலைவரது விருந்தோம்பலும் தோழமை உணர்வும் அவரிடத்தில் முன்னின்றன. நோர்வே ராஜதந்திரிகளுடனான சந்திப்பில் தலைவரின் மொழிபெயர்ப்பாளராக செயற்பட்டேன். நோர்வே வெளிவிவகார அமைச்சருடன் நடைபெற்ற மதிய உணவின்போது நோர்வே நாட்டின் அரச பரம்பரையைப் பற்றி உரையாடினார். அவ்வுரையாடல், உலக வரலாறுகளில் தலைவருக்கு இருந்த புலமையைப் புலப்படுத்தியது.

தலைவர் தூர நோக்குக் கொண்டவர். விடுதலைப் போராட்டத்திற்கும், சுதந்திர தமிழீழத்திற்கும் கடலின் முக்கியத்துவத்தை தலைவர் நன்கு அறிந்திருந்தார். சிறீலங்காத் தீவின் வட - கிழக்கு நிலம் மட்டுமல்ல அந்நிலத்தை அண்டிய கடலும் தமிழர்களுக்கு உரித்தானது என்ற கருத்தையும்
அதற்கான செயலையும் முதலில ; எடுத்துரைத்து செயற்பட்டவர். தலைவர் தாயகத்தலைவர்கள் தங்களுடைய அரசியல் நடவடிக்கைகளில் தரைக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் போன்று கடலுக்கும் கொடுக்க வேண்டும். இன்றைய பூகோள அரசியலிலும், வர்த்தகத்திலும் கடலே
முக்கியத்துவம் பெறுகின்றது. வட - கிழக்கை அண்டிய கடல் ஈழத்தமிழர்களின் இறைமைக்குட்பட்டது என்ற கருத்தை நாம் வலியுறுத்தும் போதும ; அது தொடர்பான போராட்டங்களில் நாம் ஈடுபடும்போதுதான் இந்துமா சமுத்திரம் தொடர்பான பூகோள அரசியலில் நாம் பார்வையாளர் நிலையிலிருந்து பங்காளர்களாக மாறலாம்.

தலைவர் எந்த அரசியல் நகர்விற்கும் பலம் முக்கியமானது என்பதில் உறுதியுடன் இருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் பலமாக இருந்தபடியால்தான் சிங்களம் மட்டுமல்ல, உலகமே கிளிநொச்சிக்குப் படையெடுத்ததை நாம் காணக்கூடியதாக இருந்தது. பேச்சுவார்த்தைக் காலத்தில் கிளிநொச்சி தென்னாசியாவின் தலைநகராக மிளிர்ந்தது.

தென்னாசியாவில் அரசியல ; போராட்டங்கள் அகிம்சை வழியிலேயே மேற்கொள்ளப்பட்டன. இந்தியா என்றாலும் சரி, நேபால் என்றாலும் சரி, மாலைதீவு என்றாலும் சரி போராட்டங்கள் அகிம்சை வடிவிலே மேற்கொள்ளப்பட்டன. (சிறீலங்கா போராட்டம் இன்றி சுதுந்திரம் பெற்றது).

இந்தியாவில் மகாத்மாகாந்தி அகிம்சை வடிவில் போராட்டத்தை மேற்கொண்ட போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஆயுதப் போராட்டத்திற்கு தமிழகம் முக்கியமானதொரு ஆதரவுத்தளமாக இருந்தது. வைத்தியர்
செண்பக இராமன் சுபாஷ் சந்திரபோஸின் தளபதியாகச் செயல்பட்டார். தலைவர் சுபாஷ் சந்திரபோஸை தன்னுடைய முன்மாதிரியாக ஏற்றுக்கொண்டார்.

1958 ஆம் ஆண்டு தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்ட போது தலைவருக்கு நான்கு வயது. அப்பருவத்திலே தலைவர் தனது தந்தையிடம் ஏன் தமிழர்கள் திருப்பி அடிக்கவில்லை எனக் கேட்டவர். தலைவருடைய அந்தக் கேள்வி தமிழர்களின் புதிய வரலாற்றுக்கு ஆரம்பப்புள்ளியாக அமைந்தது.

வரலாற்றின் நிர்ப்பந ;தத்தின் காரணமாக தமிழர் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். தலைவர் அந்தப் போராட்டத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்தார். உலக நீதிமன்றம், மேற்கு சஹாரா வழக்கில் அபாயங்கள ;, தியாகங்கள் நிறைந்த விடுதலைப் போராட்டம் உண்மையானதும், உன்னதமானதுமென கூறிய வாசகங்களை இத்தருணத்தில் குறிப்பிடுவது பொருத்தமெனக் கருதுகின்றேன். Dr.Sunyatsen இன் சீன விடுதலைப்போராட்டம், ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க விடுதலைப் போராட்டங்களின் அடிப்படையில் தலைவர் ஆரம்பத்தில் கெரில்லா போராட்ட முறையை தேர்ந்தெடுத்தார். இந்திய அமைதிப் படையினர் திரும்பிப் போன பின்னர் கெரில்லா போர்முறை மரபுவழி போர் வடிவமாக பரிணாமம் பெற்றது.

2009ம் ஆண்டு தமிழினப் படுகொலையுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனித்தார்கள். நாம் ஒரு சிறு இனம் என்றாலும் பல ஆயிரம் வருடங்களுக்கு மேலாகப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு இனம். நாம் இன அழிப்புக்குள்ளாக்கப்பட்ட இனம் என்றாலும் இன்று மீண்டும் எழுந்து நின்று இன அழிப்பிற்கான நீதிக்காக புதிய களங்களை திறந்து போராடுகின்ற ஒரு இனம். நாம் பாதிப்பிற்குள்ளான இனம் என்றாலும், பரிதாபத்திற்கு உள்ளான இனம் அல்ல. பலம் பலவடிவங்களைக் கொண்டது. இராணுவம் மட்டுமே பலம் என்பதல்ல. நாம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மக்கள். நாங்கள் இந்து சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கின்றோம். அந்த கேந்திர முக்கியத்துவத்தை மூலதனமாகக் கொண்டு எமது போராட்டத்தை தொடருவோம்.

- வி. ருத்திரகுமாரன்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
r.thave@tgte.org
Visit us on social media:
Facebook
Twitter
Other

Legal Disclaimer:

EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.