வலிந்து காணாமலாக்கப்பட்ட அனைத்துலக நாள் ! உலகளாவிய கவனயீர்ப்பு நிகழ்வுகள்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Disappear 2021
'வலிந்து காணாமலாக்கப்பட்டமை : தமிழினப்படுகொலை மூலோபாயத்தின் ஓர் அங்கம்'
NEW YORK, UNITED STATES OF AMERICA, August 29, 2021 /EINPresswire.com/ --ஐ.நாவினால் பிரகடனப்படுத்தப்பட்ட (ஓகஸ்ற் 30) வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி, உலகளவியரீதியில் பல்வேறு கவனயீர்ப்பு நிகழ்வுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கைத்தீவின் இறுதிப்போரின் போது, சிறிலங்கா இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே என்பதோடு, வெள்ளை வானில் கடத்தப்பட்டும், விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எங்கே என வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை தேடி 1000 நாட்களைக் கடந்து தாய்மார்களின் நீதிக்கான போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
'வலிந்து காணாமலாக்கப்பட்டமை : தமிழினப்படுகொலை மூலோபாயத்தின் ஓர் அங்கம்' என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவிப்பதோடு, இதii வலியுறுத்தியே இக்கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்துள்ளது.
நாளை திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்பு நிகழ்வுகளானது,
* பிரான்ஸ் :
Trocadero வில் அமையப்பெற்றுள்ள மனித உரிமை சதுக்கத்தில் மாலை 15 மணி முதல் 17 மணி வரை.
* பிரித்தானியா :
Trafalgar Square சதுக்கத்தில் மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை
* ஜேர்மனி :
Herzog Christoph Denkmal platz Königstr, 70173 Stuttgart பகுதியில் மாலை 17 மணி முதல் 19 மணி வரை.
இடம்பெற இருக்கின்றன.
* இதேவேளை கனடாவில் (Branpton - Chi,guacousy Park) இன்று ஞாயிற்றுக்கிழமை (ஓகஸ்ற் 29) தொடங்கி நாளை திங்கட்கிழமை (ஒகஸ்ற் 30 - Queen's Park) நிறைவு காண இருக்கின்ற நீதிக்கான நடைப்பயணத்துக்கு தனது தோழமையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Transnational Government of Tamil Eelam
TGTE
+1 614-202-3377
email us here
Visit us on social media:
Facebook
Twitter
Legal Disclaimer:
EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.