சுதந்திர தமிழீழமானது இந்தியாவுடன் சிறப்பான நல்லுறவைப் பேணிப் பாதுகாக்கும்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
சிங்களவர்களின் இந்திய வெறுப்பு உணர்வை இன்னமும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துகொள்ளவில்லை
NEW YORK, June 15, 2013 /EINPresswire.com/ -- — வி.உருத்திரகுமாரன்
இலங்கைத் தீவினில் உருவாகும் சுதந்திர தமிழீழ அரசானது இந்தியாவுடன் சிறப்பானதோர் நல்லுறவைப் பேணிப் பாதுகாக்குமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் முரசறையப்பட்டிருந்த தமிழீழ சுதந்திர சாசனத்தினை முரசறைவினை கோடிட்டுக்காட்டி இதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழீழ சுதந்திர சாசனத்தின் 12ம் பிரிவில் 'தமிழீழ அரசானது இந்திய மக்களுக்குத் தமது பரிபூரண ஆதரவைத் தெரிவிப்பதோடு, இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அமைதியையும் அதன் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தமிழீழ அரசானது இந்திய நாட்டுடன் சிறப்பான நல்லுறவைப் பேணி வரும்.' என கூறப்பட்டுள்ளது.
இது இவ்வாற்றிருக்க இந்தியா தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது இந்தியாவை ஈழத் தமிழர்கள் நட்பு நாடாகப் பார்த்தார்களே அன்றி, சிங்கள அரசும் சிங்கள மக்களும் அவ்வாறு பார்க்கவில்லை. சிங்களவர்கள் இந்தியாவை ஒரு ஆக்கிரமிப்பு நாடாகவே பார்க்கிறார்கள்.
ஈழத் தமிழர்கள் மீதான சிங்களவர்களின் வெறுப்பில் ஒரு பாதி இந்திய வெறுப்பு உணர்வும் உண்டு என்பதை இந்தியா நினைத்துப் பார்க்க வேண்டும். இந்தியா சிறீலங்கா அரசைக் கையாள்வதன் ஊடாக, அந்தத் தீவைக் கையாளும் அணுகுமுறையைக் கொண்டுள்ளது.
சிறீலங்காவை அரவணைத்துக் காரியம் பார்க்கலாம் என்று இந்தியா நினைக்கக்கூடும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவின் உறுதியான ஆதரவு சிறீலங்காவுக்குத் தேவைப்பட்டது.
இதனால், இந்தியாவிடம் பணிவது போல சிறீலங்கா தலைவர்கள் நடித்தனர்.
இப்போது இந்தத் தேவை சிறீலங்காவுக்கு இல்லை. இதனால், சிறீலங்காவைக் கையாள்வது இந்தியாவுக்கு இலகுவாக இருக்காது.
சிங்களவர்களின் இந்திய வெறுப்பு உணர்வை இன்னமும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துகொள்ளவில்லை!' என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்திருந்தமை இங்கு நினைவிற்கொள்ளதக்கது.
Contact: pmo@tgte.org
Video: http://m.youtube.com/watch?v=dlHb8dXyZFQ&desktop_uri=%2Fwatch%3Fv%3DdlHb8dXyZFQ
Web: www.tgte-us.org
Visuvanathan Rudrakumaran
TGTE
+(33)65-105-5300
email us here
Legal Disclaimer:
EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.