குற்றிவியல் நீதிமன்றில் சிறிலங்காவை பாரப்படுத்த வேண்டுமா - விவாதிக்க தயாராகும் நிபுணர்கள் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
இக்கருத்தாடலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் TGTE.TV வலைக்காட்சியூடாக காணலாம் - *நியு யோர்க் நேரம் காலை 8 மணி, பிரித்தானிய மதியம் 1 மணி, இலங்கை மாலை 5:30மணி
NEW YORK, NY, UNITED STATES, September 3, 2024 /EINPresswire.com/ -- ஜெனீவா, ஐ.நா மனித உரிமைச்சபையின் 51வது கூட்டத் தொடர் தொடங்கிவிருக்கின்ற நிலையில், தமிழினப்படுகொலைக்கு பொறுப்புக்கூறும் வகையில் சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துதல் தொடர்பான சர்வதே நிபுணர்களின் கருத்தாடல் ஒன்று இடம்பெற இருக்கின்றது.* இக்கருத்தாடலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் TGTE.TV வலைக்காட்சியூடாக காணலாம்.
* நியு யோர்க் நேரம் காலை 8 மணி, பிரித்தானிய நேரம் மதியம் 1 மணி, இலங்கை நேரம் மாலை 5:30மணிக்கு
சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி, தமிழர் தேசத்தின் நிலைப்பாட்டை அனைத்துலகிற்கு உரத்துரைக்க தமிழ்பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்க, மறுபுறம் நடந்தேறிய தமிழினழிப்படுகொலைக்கு பொறுப்புக்கூற வைக்க சிறிலங்காவை அனைத்துலக குற்றவியில் நீதிமன்றில் பாராப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது.
அந்தவகையில் எதிர்வரும் செப்ரெம்பர் 5ம் நாள் வியாழக்கிழமை இடம்பெற இருக்கின்ற இணையவழியிலான கருத்தாடலில், சர்வதேச வல்லுனரும், சிறிலங்காவை கண்காணிக்கும் பன்னாட்டு குழுவின் (MAP) பொறுப்பாளருமாக இருந்த:
1) Geffrey Robertson, AC, KC ,
2) போர்குற்ற விவகாரங்களுக்கு பொறுபாவிருந்த அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் Stephen Rapp ,
3) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்,
4) சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்;
ஆகியோர் பங்கெடுக்கின்றனர்.
* நியு யோர்க் நேரம் காலை 8 மணி, பிரித்தானிய நேரம் மதியம் 1 மணி, இலங்கை நேரம் மாலை 5:30மணிக்கு இடம்பெற இருக்கின்ற இக்கருத்தாடலை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் TGTE.TV வலைக்காட்சியூடாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
https://www.einpresswire.com/article/740405737/webinar-international-experts-to-discuss-whether-sri-lanka-should-be-referred-to-icc-tgte
Visuvanathan Rudrakumaran
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
r.thave@tgte.org
Visit us on social media:
Facebook
X
Instagram